புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஆக., 2014

கர்ப்பிணியை கொன்ற மகேஸ்வரி நிதிய டிப்பர் வாகனம் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
 
நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனம் ஊர் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நவக்கிரி புத்தூர் சரஸ்வதி வீதியில் இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் 3மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
சரஸ்வதி வீதியை சேர்ந்த கவிந்திரன் சுபாஜினி வயது 23 என்பவரே இவ்வாறு சாவடைந்தவராவார்.
சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் குறித்த டிப்பர் வாகனத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.
குறித்த டிப்பர் வாகனம் மகேஸ்வரி நிதியத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்