புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஆக., 2014news
 சேலம் மேட்டூர் வனப்பகுதியில் கைக் குண்டுகள் அடங்கிய ஆயுத குவியல்வீரப்பனுடையதா? அல்லது புலிகளுடையதா?  ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது வீரப்பனுக்கா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கா சொந்தமானது என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக நேற்று முன்தினம் வனத்துறையினர் குழிகள் தோண்டியபோது ஏராளமான ஆயுதங்கள், குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகிக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அங்கு முகாமிட்டு போர் பயிற்சிகள் பெற்றனர். அந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதா இந்த ஆயுதங்கள்? அல்லது வேறு தீவிரவாத அமைப்புகள் பதுக்கியதா என பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆயுத புதையல் கிடைத்த பகுதியில் உள்ள ஒரு சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடயங்கள் மற்றும் 3 கைக்குண்டுகள் இருந்தமையால் சந்தன கடத்தலில் ஈடுபட்ட வீரப்பன் கூட்டம் நவீன துப்பாக்கி மற்றும் கண்ணி வெடிகளை பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே, வீரப்பன் கும்பலை சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
என்னொரு கோணத்தில் பார்த்தால் குறித்த ஆயுதப் புதையலில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட இரும்பு பரலில் எல்.டி.டி என்று எழுதப்பட்டிருப்பதாகவும் எனவே இது புலிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
-