புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

சர்ச்சை சாமியார் ராம்பாலை சுற்றி ஆயுதம் ஏந்திய சீடர்கள்: 
ஆசிரமத்தை சுற்றி வளைத்து கைது செய்ய போலீசார் தீவிரம் ( படங்கள்)
அரியானா மாநிலத்தில் சார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஆசிரமம் நடத்தி வருபவர் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் (வயது 63).

கடந்த 2006-ம் ஆண்டு, ஜூலை 12-ந் தேதி இவரது ஆதரவாளர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சாமியார் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் ரோட்டாக் செசன்சு கோர்ட்டில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் சாமியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டும் தொடர்ந்து 3 முறை ஆஜர் ஆகாத நிலையில், அவர் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வெள்ளிக்கிழமைக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அரியானா மாநில போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டிப்புடன் உத்தரவிட்டது.

இதையடுத்து சாமியாரின் ஆசிரமத்தை சுற்றி வளைத்து, அவரை கைது செய்வதற்காக போலீஸ் அதிகாரிகள் நேற்று சென்றனர். கூடவே பெரும் போலீஸ் படையும் சென்றது.

அப்போது ஆசிரமத்துக்கு உள்ளே இருந்த சாமியாரின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது சாமியார் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் செய்தி சேகரிப்பதற்காகவும், படம் எடுப்பதற்காகவும் சென்றிருந்த ஊடகத் தினரும் சிக்கினர். டெலிவிஷன் சேனல்களின் ஒளிப்பதிவாளர்களது கேமராக்கள் உடைபட்டன.

சாமியாரின் ஆதரவாளர் களை விரட்டியடிக்க ஏதுவாக போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். தடியடி நடத்தினர். ஆனால் ஆசிரமத்துக்கு உள்ளே இருந்த அவரது ஆதரவாளர்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

நிலைமை மோசமானதால், துணை ராணுவத்தினரும் வந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீசாருடன் இணைந்து அவர்களும் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து சாமியார் ஆதரவாளர்களை விரட்டியடிக்க முற்பட்டனர்.

இந்த மோதல் சம்பவத்தில் ஊடகத்தினர், போலீசார் 100 பேர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆசிரம பகுதியே போர்க்களம் போல காணப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆசிரம சுவரை உடைக்க ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட் டது. அதை  சாமியாரின் சீடர்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம் அதிகரித்தது. இதை யடுத்து பரிவாலாவில் போக்கு வரத்து நிறுத்தப் பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளா னார்கள்.
இந்த நிலையில் சாமியாரின் ஆசிரமத்துக்குள் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் இருப்பது தெரிந்தது. அவர்களை சாமியாரின் சீடர்கள் மனித கேடயம் போல வைத்து இருப்பதும் தெரிய வந்தது. இதனால் போலீசார் மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி நேற்றிரவு ஆசிரமத்துக்கான மின்சா ரம், குடிநீரை போலீசார் துண்டித்தனர். பிறகு ஆசிர மத்துக்குள் இருப்பவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் உத்தர விட்டனர். இதைக் கேட்டதும் ஆசிரமத்துக்குள் இருந்த பலர் அவசரம், அவ சரமாக வெளியேறி வந்த னர்.

அவர்களை போலீசார் சோதனை நடத்தி வாகனங் களில் ஏற்றி அனுப்பி வைத் தனர். இன்று அதிகாலை யிலும் நூற்றுக்கணக்கான வர்கள் ஆசிரமத்துக்குள் இருந்து வெளியில் வந்தனர். இதனால் ஆசிரமத்துக்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி ஆசிரமத்துக்குள் சாமியார் ராம்பாலின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமே உள்ளனர். சாமியார் ராம்பா லுக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வந் துள்ளது. அவரை சுற்றி ஆயுதம் ஏந்திய சீடர்கள் நிற்பதாக கூறப்படுகிறது.

என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி சாமியார் ராம்பாலை கைது செய்ய வேண்டும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர். இதுபற்றி அரியானா டி.ஜி.பி. கூறுகையில், சாமியார் ராம்பாலை இன்று கைது செய்து விடுவோம் என்றார். ஆசிரமத்தில் இருக்கும் சீடர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள கூடுதல் துணை நிலை ராணுவப் படை பர்வாலா சென்றுள்ளது. அவர்கள் ஆசிர மத்தை சுற்றி வளைத்து நிற்கிறார்கள். இதனால் பர்வாலா நகரில் பதற்றம் நீடித்தப்படி உள்ளது.

 

ad

ad