புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014



விஜய் டி.வி. விருதுகள் விழாவில் விஜய் சேதுபதியிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி...
"இங்கே இருப்பவர் களில் நீங்கள் யாரை கடத்திச் செல்ல விரும்பு கிறீர்கள்?'

"நயன்தாரா' என்றார் விஜய் சேதுபதி. உடனே வெட்கத்தில் சிவந்து சிரித் தார் நயன்தாரா. "நானும் நயன்தாராவை விமானம் மூலம் கடத்திச் செல்ல விரும்புகிறேன்' என்றார் சிறப்பு விருந்தினர் ஷாருக்கான்.

அந்த அளவு... ஹீரோக்களிடம் நயன்தாரா அட்ராக்ஷன் இருக்கிறது!

விஜய்சேதுபதிக்கு போன் செய்த தனுஷ் "என் தயாரிப்பில் நீங்க ஹீரோவா நடிக்கிறீங்க! நீங்க கடத்த விரும்பிய நடிகைதான் உங்களுக்கு ஜோடி!' என்றார்.

இந்நிலையில்... 

""எங்களின் நட்பைக் கெடுத்தது விஜய் சேதுபதியின் "நயன்தாரா மோகம்!' என்கிறார் தயாரிப்பாளர் "ஸ்டுடியோ 9' சுரேஷ் களஞ்சியம்.

விஜய் சேதுபதிக்கும் தயாரிப்பாளர் சுரேஷிற்கும் இடையே "வசந்தகுமாரன்' படம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கலையும், அதைத் தொடர்ந்து பலரும்... ஆளாளுக்கு பஞ்சாயத்து செய்வதையும், கடந்த இதழில் "விஜய் சேதுபதிக்கு கொலை மிரட்டல்' என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தியை வெளியிடும் போது விஜய் சேதுபதியின் கருத்தையும் வெளியிட்டோம். சுரேஷின் கருத்தையும் பதிவு செய்யவே விரும்பினோம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

இதழ் வெளியானதும் சுரேஷ் விளக்க மளிக்க முன்வந்தார்.

இதோ, அவர் தரப்பு நியாயம்...

""ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி "நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தின் சென்னை சிட்டி ஏரியா விநியோகம் வாங்கினேன். படம் வெளியான மறுநாள் தியேட்டருக்கு வந்தார் விஜய் சேதுபதி. அப்போதுதான் அவரிடம் நேரடி அறிமுகம். "ஃபிரீயா இருந்தா ஆபீஸ் வாங்களேன்' என்றேன். வந்தார். "என் ஃப்ரெண்ட் ஆனந்தகுமரேசன் நல்ல கதை வச்சிருக்கார். அவரை டைரக்டராக்கி, நீங்க படம் தயாரிச்சு அவருக்கு வாழ்க்கை கொடுக்கணும்!' என்றார் சேது.

அப்போது சேதுவுக்கு சொல்லிக் கொள்ளும்படி மார்க்கெட் இல்லை. இருப்பினும் ஒரு கோடி சம்பளம் பேசி பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தேன். இதுதான் "வசந்தகுமாரன்' படத்தின் ஆரம்ப கட்டம்.

"நம்ம படத்த பொறுமையா எடுக்கலாம்' என்றார். நானும் சம்மதித்தேன். இதற்குள் நாங் கள் நல்ல நண்பர்களாகிட்டோம்.

"இப்போ நான் முடிச்சிருக்கும் "சூது கவ்வும்' படம் பிரமாதமா வந்திருக்கு' என்றார். அதனால் அந்தப் படத்தை வாங்கி வினியோகம் செய்தேன். "இனி நம்ம படத்தை ஆரம்பிக்கலாமா?'னு நான் கேட்டபோது... "இந்தப் படத்தில் நடுத்தர வயசு கேரக்டருக்காக சதை போட்டுட்டேன். இதே சதைப்பிடிப்பு கேரக்டர்தான் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய்' படம். அதை முடிச்சிட்டு வர்றேன். நீங்க பிந்து மாதவியையும், வரலட்சுமியையும் ஹீரோயினா புக் பண்ணுங்க!' என்றார். அதன்படி அட்வான்ஸ் கொடுத்து அவர்களை ஒப்பந்தம் செய்தேன். ஆனால் தொடர்ந்து ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி "பண்ணையாரும் பத்மினியும்', "ரம்மி' என வேறு படங்களில் நடித்தார். "பாலகுமாரா' ஒட்டு மொத்த தியேட்டர் விநியோக வகையில் எனக்கு ஒண்ணே முக்கால் கோடி நஷ்டம். என்னிடம் வாங்கி வெளியிட்டவர்கள் நஷ்ட ஈடு கேட்டு நெருக்கடி கொடுத்ததால் அதை சரிக்கட்ட உடனே...

ad

ad