புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014




க்களின் நாடித்துடிப்பு நமது சர்வே படிவத்தில் நன்றாகவே வெளிப்பட்டது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம் என்ற எண்ணம் ஸ்ரீரங்கம்
தொகுதி மக்களிடம் அழுத்தமாக உள்ளது. ஆளுங்கட்சிதான் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெறும் என்ற எண்ணத்தை 2014 உருவாக்கியிருப்பதையும் அறிய முடிந்தது. ஆளுங்கட்சிக்கான ஆதரவு ஒரு புறமும், ஆளுங்கட்சி மீதான அச்சம் இன்னொரு புறமும் தெரிந்தது. இரண்டுமே ஆளுங்கட்சியான அ.தி.மு.கவுக்கு சாதகமாகவே இருக்கின்றன என்பதுதான் வித்தியாசமானது.

ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது பற்றி வாய் திறக்க பயப்படுபவர்கள் அதிகம். என்ன வழக்கு என்று புரியாத பலரும் இருக்கிறார்கள். "அந்தம்மா ஊழலா செய்தது? வருமானத்துக்கு அதிகமா சொத்துதானே சேர்த்தது?' என்று சொல்கிறவர்களை சர்வே களத்தில் நாம் பார்க்க முடிந்தது. இதற்குத்தான் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் ஜெ.வுக்கு நான்காண்டுகள் தண்டனை தரப்பட்டது என்பதே பலருக்குத் தெரியவில்லை. இதனை எதிர்க்கட்சிகளும் சரியான முறையில் மக்களிடம் சேர்க்கவில்லை. அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க.தான் எனப் பெரும்பாலானவர்கள் சொன்னாலும், இரண்டு கட்சிகளுக்குமான ஆதரவு அளவில் பெரும் வித்தியாசம் தெரிகிறது. மக்களிடம் கருத்துகள் கேட்டபோது இவற்றிற்கானக் காரணங்கள் வெளிப்பட்டன.



ஸ்ரீரங்கம் ராஜவீதி முருகேசன் : ""இந்த லோகத்தில் தப்பு பண்ணாதவா யாரு? எல்லா அரசியல்வாதிகளும் தப்புப் பண்ணிண்டேதான் இருக்கா? 66 கோடி எல்லாம் சாதாரணம்? அதுக்கு ஜெயிலிலே அடைப் பாளா? அவாளுக்குன்னு யார் இருக்கா? சுத்தி இருக்கிறவா அவளைத் தப்பான வழிக்குக் கூட்டிட்டுப்போயிட்டா. இன்னும் கொஞ்சம் நாளில் எல்லாம் சரியாப் போயிடும்.

பெட்டிக்கடைக்காரர் பெருமாள்சாமி : ஸ்ரீரங்கத்துல கோயிலோட முக்கிய வீதியில் குடிஇருப்பவர்களெல்லாம் கோயில் நிலம்ங்கிற பேரிலே அடிமனை பிரச்சினையிலே இருக்காங்க. ஜெ. இதை சரி செய்வதாக வாக்குறுதி கொடுத் தார். மூணு வருசத்துக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையு மில்லை. அதனால இங்கே இருக்கிறவங்க எந்தப் பத்திரமும் பதிவு செய்ய முடிவதில்லை.

பனையபுரம் ஜெயலட்சுமி:  மக்களோட நம்பிக்கையை தி.மு.க.காரங்க இழந்துட்டாங்க. அவங்க யாரும் எம்.பி. தேர்தல் சமயத்திலேயே எந்த வேலையும் செய்யலை. முதல்வரோட தொகுதிங்கிறதால ஆளுங் கட்சிக்காரங்க எங்க வீடு தேடி வந்து இலவச பொருட்களை யெல்லாம் கொடுத்துட்டுப் போறாங்க.

மணிகண்டம் பாலு என்கிற பாக்கியராஜ் : தி.மு.க. ஆட்சியில விலைவாசி ஏறுன தைச் சொல்லித்தான் இந்தம்மா ஜெயிச்சி வந்தாங்க. ஆனா இவங்க ஆட்சிக்கு வந்ததும் பால் விலையிலே இருந்து மின்சாரக் கட்டணம் வரைக்கும் பல மடங்கு ஏறிடிச்சி. எல்லாம் காலத்தின் கட்டாயம்னு டயலாக் அடிக்கிறதெல்லாம் நம்புற மாதிரி இல்லை. ஆனா இந்த மக்கள் நம்புறாங்களே.. நாட்டுல இருக்கிற பிரச்சினைகளுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிற மாதிரியில்ல மக்கள் இருக்காங்க.


பெயரைத் தவிர்க்கச் சொன்ன காங்கிரஸ்காரர் : உண்மையச் சொல்றேங்க. இந்தம்மா ஏகப்பட்ட திட்டங்களை அறிவிச்சித் தள்ளியதால ஸ்ரீரங்கத்துல மட்டும் பாலாறும் தேனாறும் ஓடுவதா மற்ற தொகுதி மக்கள் நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஆனா இந்தத் தொகுதி, தங்கத்துல சட்டை போட்ட குஷ்டரோகி  மாதிரி இருக்குது. 


பேட்டைவாய்த்தலை குமரேசன் : திருச்சி மாவட்டத்திலேயே அதிகளவில் முதியோர் பென்ஷன் வாங்குறது ஸ்ரீரங்கமாகத்தான் இருக்கும். ஆனா, 4 மாசமா முதியோர் உதவித் தொகை வரவேயில்லை. எங்க பெயர்களையெல்லாம் நீக்கிட்டதாகவும் சொல்றாங்க. ஒண்ணுமே புரியலை.

ஆதரவு -அனுதாபம் -அதிருப்தி -அச்சம் என கலவையாக இருக்கிறது ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் மனசு. அதில் ஆதரவும் அனுதாபமும் கூடுதலாகத் தெரிகிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் எதிர்க்கட்சிகள் ரொம்பவே உழைக்க வேண்டியிருக்கும்.               
   

ad

ad