புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

"வானொலிக்கருவி ஒன்றை மட்டுமே நாம் கொடுத்தோம் .மகிந்தவுக்கு தெரியும் நோர்வேயின் உதவி- எரிக் சொல்யஹய்ம் அறிக்கை
அமைதிப் பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளுக்கு எந்த வித நிதியுதவிகளையும் நாம் வழங்கவில்லை. 


பேச்சை இலகுபடுத்துவதற்காக வானொலி ஒலிபரப்புக் கருவி ஒன்றை மட்டுமே புலிக ளுக்கு வழங்கினோம்.

இவ்வாறான உதவிகள் அரசாங்கத்துக்கு தெரிந்து கொண்டே வழங்கினோம். அதில் பிரதமராக மகிந்த ராஜபக்­ இருந்த காலமும் அடங்கும் என நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்யஹய்ம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்மீது ஆச்சரியப்படத்தக்க தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதரும் முன் னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, குருநாகலில் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, சமாதான பேச்சுக்காலத்தில் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், நோர்வே அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக எரிக் சொல் ஹெய்ம் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரங்கள் தொடங்கியிருக்கின்ற தறுவாயில் மகிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருப்பதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்று தான் ஊகங்களை வெளிப்படுத்தப்போவதில்லை என்று கூறியிருக்கின்ற எரிக் சொல்ஹெய்ம், நடக்கவிருக்கின்ற தேர்தலில் தனது பெயர் எவ்விதத்திலும் இழுக்கப்படுவதை அனுமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலாக எல்லோரும் அறிந்திருக்கின்ற வெளிப்படையான தகவல்களை மீண்டும் தான் வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கின்றார்.

இலங்கையின் அமைதி முயற்சிகளுக்கு ஏற்பாட்டாளராக, மூன்றாவது தரப்பாக பங் கெடுத்திருந்திருந்த நோர்வே அரசு ஒரு போதும் விடுதலைப் புலிகளுக்கு பொதுவான அடிப்படைகளிலோ அல்லது அவர்களின் இராணுவ நடவடிக்கைகளுக்கு குறிப்பாகவோ நிதி வழங்கவில்லை என்றும் எரிக் சொல்ஹெய்ம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அப்போது நடந்துவந்த அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு உதவும் முகமாக, விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு பொருளாதார ரீதியான வளங்களை நோர்வே ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையிலேயே புலிகளுக்கு வானொலி ஒலிபரப்புக் கருவி  ஒன்றை வழ ங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படியான உதவிகள், வௌவேறு தலைவர்களின் கீழிருந்த இலங்கை அரசா ங்கத்திற்கு முழுமையாகத் தெரிந்தே இருந்ததாகவும், அதில் மகிந்த ராஜபக்ஷ பிரத மராக இருந்த காலமும் அடங்கும் என்றும் சொல்ஹெய்ம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாங்கள் மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தொடர்பில் இலங்கை அர சாங்கத்துடன் முழுமையாக வெளிப்படையாகவே நடந்துகொண்டதாகவும் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதர் கூறுகின்றார்.

ad

ad