புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2014

கறுப்புப் பண விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க சம்மதம் ஜி.20 நாடுகள் அமைப்பு தெரிவிப்பு
கருப்புப் பண மீட்பு விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர ஜி-20 அமைப்பு நேற்று சம்மதம் வழங்கியது.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு முயறசிகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவிலும் இதற்கான ஆதரவைத் திரட்டி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களான பிரேசில் அதிபர் தில்மா ரூசோப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோரை நேற்று முன்தினம் மோடி சந்தித்தார்.

அப்போது, கருப்புப் பணத்தை மீட்க இந்தியா எடுத்து வரும் நடவ டிக்கைகள் குறித்துப் பேசிய மோடி, “வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதில் அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது.

கருப்பு பணத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு சவால்கள் எழுந்துள்ளன. எனவே, கருப்பு பணத்தை மீட்பதில் சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோன்று, ஜி-20 மாநாட்டிலும் கருப்பு பணம் குறித்த கோரிக்கையை மோடி வலியுறுத்தினார்.

எல்லை கடந்த வரி தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு குறித்து கவலை தெரிவித்த மோடி, முதலீடு, தொழில் நுட்பம் தாராளமாக கிடைக்கும் நிலை உருவாகி இருப்பதால் வரி தவிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்புகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுளளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, வரி தவிர்ப்பு மற் றும் வரி ஏய்ப்புகள் குறித்து ஜி-20 நாடுகள் கவனத்தில் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-20 மாநாடு நிறைவடைந் ததையடுத்து, மாநாட்டு அறிக்கை வெளியிடப்பட் டது.அதில், ‘பொருளா தார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) மற்றும் ஜி 20 அமைப்புகள் வரி ஏய்ப்பு மற்றும் தவிர்ப்பு (பேஸ் எரோஷன் அண்ட் பிராபிட் ஷிப்டிங்) தொடரபாக சர்வதேச வரிச் சட்டங்களை நவீனப்படுத்தும் திட்டத்தை வரவேற்கின்றன.

மேலும், இந்நட வடிக்கைகளை அடுத்த ஆண்டுக்குள் இறுதி செய்ய இவ்வமைப்பு உறுதிபூண்டுள்ளது.

நாடுகளின் வருவாய் ஆதாரங்களைப் பாதுகாக்க நேர்மையான சர்வதேச வரி விதிப்பு முறையை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம்’ எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

ad

ad