27 நவ., 2014

 ராஜபக்சேவுடன் மோடி சந்திப்பு; மீனவர்கள் விடுதலைக்கு நன்றி!
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர
மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

போதைப் பொருள் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் தமிழகமே கொந்தளித்தது.
இதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தலையீட்டின் பேரில் 5 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய இலங்கை அதிபர் ராஜபக்சே, தூக்குத் தண்டனையை ரத்து செய்தார். இதையடுத்து, அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

இதனிடையே, நேபாள  தலைநகர் காத்மாண்டுவில் நடந்து வரும் சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தெற்காசிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அப்போது, தமிழக மீனவர்களின் தூக்குத் தண்டனையை
ரத்து செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.