புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2014

சரிதாவுக்கு கருணை காட்டுங்கள்: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு சச்சின் வேண்டுகோள்
சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கருணை காட்ட வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி சிறப்பாக செயல்பட்டும் தோல்வி அடைந்ததாக நடுவர்கள் அறிவித்ததால், அதிருப்தி அடைந்ததோடு, பதக்கத்தை திருப்பி அளித்தார். இதனால், சரிதா தேவியை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இடை நீக்கம் செய்தது.

இந்நிலையில், சரிதா தேவி விவகாரம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலை, சச்சின் டெண்டுல்கர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சச்சின், சரிதா தேவிக்கு நாடே பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும், சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கருணை காட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, சச்சினின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர், சரிதா தேவி இடைநீக்கத்திற்கு எதிராக சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தில் முறையீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

ad

ad