புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2014

10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி, ராஜபக்சவுக்கு ராஜமரியாதை கொடுப்பாரா? - வைகோ ஆவேசம்
10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு ராஜமரியாதை? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார். 
பினாங்கு பிரகடன பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசுகையில்,
ஈழத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும், சிறையில் உள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டும், உலக நாடுகள் முழுவதும் ஐநா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பினாங்கு பிரகடன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த பிரகடனத்தை விளக்க தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் கலந்துகொண்டு பேசுகிறேன். இது காலத்தின் கட்டாயம்.
ஈழத்தமிழர் விசயத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகச்சரியான அணுகு முறையில் நடந்துகொண்டார். அதேபோல் நரேந்திர மோடியும் நடந்து கொள்வதாகவும், அதில் பங்கம் வராது என்றும் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைப்பதற்கு முன் வண்டலூர் கூட்டத்திற்கு வந்தபோது உறுதியளித்தார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் பேசினேன். ஆனால் தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி கிடைத்ததும் மத்திய சர்க்கார் எதேச்சையதிகார போக்கில் நடந்து கொள்கிறது.
பிரதமர் பதவி ஏற்பு விழாவில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ச கலந்துகொண்ட போது சார்க் நாட்டு தலைவர்களை அழைத்தோம். இவரும் வந்தார் என்றார்கள்.
இப்போது மீண்டும் ராஜபக்சவை அழைத்து வந்து திருப்பதிக்குள் அனுமதித்துள்ளீர்களே. அதுவும் இந்திய இராணுவ ஹெலிகாப்டரில். இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள் மோடி?
திருப்பதி கோயிலுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சென்ற போது திருப்பதி கோயிலில் கையொப்பம் போடவில்லை என அம்மக்கள் பொங்கி எழுந்தார்கள். ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்டார்.
ஆனால் இப்போது ராஜபக்சவும் கையெழுத்து போடாமல் சென்றுள்ளார். 10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி, ராஜபக்சவுக்கு இப்படி ராஜமரியாதை கொடுப்பாரா? என ஆவேசமாக கேள்வியெழுப்பினார் வைகோ.

ad

ad