புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 டிச., 2014

ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே! அடுத்த வருடம் பிரேரணை நிறைவேற்றம்
ஈழத்தில் நடைபெற்றது இனப் படுகொலையே என்ற பிரேரணை அடுத்த வருடம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் மாதாந்த அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று இடம்பெற்றது.

இவ் அமர்வில், கடந்த அமர்வில் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் இன அழிப்பு தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படாமல் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.

இதன் காரணமாக செங்கோலினை சிவாஜிலிங்கம் தூக்கியயறிந்தமையினால் அது உடைவுற்று இருந்தது.

இந்நிலையில் செங்கோலினை உடைந்த சிவாஜிலிங்கத்திற்கு எதி ரான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் அமைச்சர்களான டெனிஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் அவைத்தலைவரிடம் கோரியிருந்தார்.

இது தொடர்பான விவாதம் நேற்று இடம் பெற்றிருந்த போதே முதலமைச்சர் மேற் கண்டவாறு தெரிவி த்தார்.

எங்களிடையே எவ்விதமான பிரிவுக ளுமில்லை. இப்பிரேரணைக்கு எவ்வித எதிர்ப்பும் எம்மிடையே இல்லை.

இப் பிரேரணையின் மூலம் யாருக்கும் நன்மையினை பெற்றுக் கொடுத்து விடாமல் நீங்களும் நாங்களும் சேர்ந்து அடுத்த வருடம் கட்டாயம் இப்பிரேரணை யினை கொண்டு வருவோம் என்றார் முதலமைச்சர்.