புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2014

அரசியல் சாசன திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு ஜனாதிபதி திட்டம்
அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தயார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமை ப்பு தம்மிடம் கடிதம் மூலமாக கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டின் அடிப்படையில் படையினரை ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த சிலர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர்.

எமது படையினர் எந்தவொரு சிவிலியனையும் படுகொலை செய்யவில்லை.

2005ம் ஆண்டு முதல் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள தாகவும் தொடர்ந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

அனுராதபுரத்தில் சிறுநீரக நோய் ஏற்பட்டு வருவதாக அறியக் கிடைத்ததாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ad

ad