புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2014

இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து : இறுதிப்போட்டியில் கொல்கத்தா
ஐ.எஸ்.எல். காற்;பந்தின் 55ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்ததால் கொல்கத்தா அரை இறுதிக்கு முன்னேறியது.

ஆட்டம் தொடங்கிய முதல் பாதியின் 27 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எட்கார் கோல் அடித்தார்.

அந்த அணியின் ரன்ட்டி மார்ட்டின் குறிப் பிட்ட தூரத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடித்தார்.

ஆனால் போஜ்ரா அந்த பந்தை தடுத்தார். ஆனால், பந்து எட்காரிடம் சென்றது. அந்த பந்தை அவர் கோலாக மாற்றினார். இதனால் 1-0 என கோவை முன் னிலை பெற்றது.

இந்த போட்டியை சமநிலையில் முடித்தாலும் அரை இறுதிக்கு முன்னேறிவிடலாம் என்று நினைத்த கொல்கத்தா அணிக்கு இது பேரடியாக விழுந்தது.

அதற்கு பதிலடி கொடுக்க கொல்கத்தா முயற்சி செய்தது. ஆனால் முதல் பாதி நேரத்தில் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

பின்னர் 2 ஆம் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளை யாடினார்கள்.

68 ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் பிக்ரு கோல் அடித்தார். இதனால் கொல்கத்தா 1-1 என சமநிலை பெற்றது.

அதன் பின் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.  ஆகவே, போட்டி சமநிலையில் முடிந்ததால் கொல்கத்தா அரை இறுதிக்கு முன்னேறியது.          
 

ad

ad