புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2014



மைத்திரிபால, மகிந்த உட்பட்ட 16 வேட்பாளர்கள் தமது சொத்துக்களை வெளிப்படுத்தினர்
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 19 மொத்த வேட்பாளர்களில் பதினாறு வேட்பாளர்கள் சொத்து
விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமது சொத்து விபரங்களை நேற்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வெளிப்படுத்தினார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த மைத்திரிபால, தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் தமது தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களில் அதன் பிரதிகள் வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதேவேளை தாம் சுகாதார அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய தேவையற்ற எரிபொருள் படிவங்களையும் அவர் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்தார்.
இதற்கிடையில் தேர்தல்கள் சட்டத்தை அரசாங்க ஊடகங்கள் மீறுகின்றன என்ற குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வீட்டில் இருந்து தேர்தல்கள் ஆணையகத்துக்கு வரும் வரையிலான காட்சியை அரச தொலைக்காட்சியான  ரூபவாஹினி ஒளிபரப்பியது.
அத்துடன் அவருக்கு அதிக நேரங்கள் அந்த தொலைக்காட்சி ஒதுக்கியுள்ளதாகவும் மைத்திரிபால குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட 16 வேட்பாளர்கள் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பதினாறு வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 19 மொத்த வேட்பாளர்களில் பதினாறு வேட்பாளர்கள் இவ்வாறு சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளனர்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் இவ்வாறு சொத்து விபரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னதாக சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை ஒப்படைத்திருந்தார்.
ஏனைய வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போதே தங்களது சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளனர்.
ஏனைய மூன்று வேட்பாளர்களும் எதிர்வரும் நாட்களில் சொத்து விபரங்களை ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வார காலத்திற்குள் சொத்து விபரங்களை ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad