புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2014



திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: வைகோ பேட்டி
திராவிட கொள்கைகளை காப்பாற்ற திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வைகோ கூறியுள்ளார். 

மதுரை விமானநிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

உலகில் வாழும் அனைவருக்கும் பொதுவான நூல் திருக்குறள் மட்டுமே ஆகும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்துத்துவா கருத்துக்களை பரப்புவதற்காக பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு போரின்போது கண்ணன் போதிக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளவைகளாக இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்ட மதத்தின் இதிகாச நூல் மட்டுமே ஆகும். இதனை எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

அதேபோல், யாராவது ஒருவர் பைபிளையோ, குரானையோ தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ? அதேபோன்றதுதான் பகவத்கீதையும், ஆனால் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான நூல் திருக்குறள் மட்டுமே ஆகும். எனவே திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார். 

மேலும், திராவிட கொள்கைகளை காப்பாற்ற திமுகவும், அதிமுகவும் தமிழகத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், தேர்தல் சமயத்தில் மட்டும் இரண்டு திராவிட கட்சிகளும் எதிர்கட்சிகள்போல் செயல்பட்டு கொள்ளலாம் எனவும் வைகோ கூறினார்.

ad

ad