புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2014

கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு? அழுத்தம் கொடுக்கும் மேற்குலக நாடு?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மேற்குலக நாடொன்று தாக்கம் செலுத்தி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது
முக்கியமான மேற்குலக நாடொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோரை கொழும்பில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக சந்தித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிநாடு செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென்ற நோக்கில் குறித்த மேற்குலக நாடு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கூட்டமைப்பிற்கும் பொது வேட்பாளருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை எதனையும் கைச்சாத்திடாது, நம்பிக்கை அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் ஏற்பாட்டை குறித்த மேற்குலக நாடு செய்துள்ளதாகவும், மேற்குலக நாடு மத்தியஸ்தம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இறுதி நேரத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த போதிலும், கீழ் மட்ட அளவில் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்குமாறு கோரப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொகுதி அமைப்பாளர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகை தெரித்துள்ளது.
இதன் ஓர் கட்டமாக அண்மையில் ஆலையடி வேம்பில் மாவை சேனாதிராஜ உள்ளிட்டவர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் கூட்டமொன்றை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

ad

ad