புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2014

முஸ்லிம் காங்கிரஸ்  முக்கிய கூட்டம்! அழையாமல் நுழைந்த தவம

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான முகா தலைவருக்கும்
முகா 
எம்பிக்களுக்குமிடையிலான இறுதிக் கட்ட சந்திப்பு நேற்று தலைவர் ஹக்கீமின் இல்லத்தில் .கூட்டம் ஆரம்பித்து சென்று கொண்டிருக்கும் வேளை அங்கு திடீரென உள்நுழைந்தார் முகாவின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  அழையாமல் தவம் குறித்த கூட்டத்திற்கு வருகை தந்தமையினால் முகா தலைவர் உட்பட எம்பிக்கள் மத்தியில் சலசலப்பும் ஒருவகையான முகச்சுழிப்பும் ஏற்பட்டது. இதன்பின்னர் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை முகா எம்பிக்கள் அனைவரும் ஒன்றுக்கு இரண்டு தடைவ முகா அரசை விட்டு வெளியேற வேண்டும் மைத்திரிபாலவுக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தத்தமது கைகளை உயர்த்தி முகா தலைவருக்கு ஆணை வழங்கினர்..
இதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ரவூப் ஹக்கீம் முகா எம்பிக்கள் மத்தியில் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதில் காணப்படும் ஒற்றுமை கிழக்கு மாகாண சபையில் உள்ள முகா உறுப்பினர்களிடம் இல்லை.
அவர்களையும் மைத்திருக்கு ஆதரவு வழங்குபவர்களாக மாற்றி எடுத்து அனைவரும் ஒன்று பட்ட ரீதியில் அரசைவிட்ட வெளியேற முயற்சி எடுக்கிறேன் என இதன் போது முகா எம்பிக்களிடம் உறுதியளித்தார் ஹக்கீம்.
இவ்வாறு முகா தலைவருக்கும் முகா எம்பிக்களுக்குமிடையில் மைத்திரிக்கே ஆதரவு என்ற முடிவு எட்டப்பட்டதை அவதானித்த அழையா விருந்தாளியாக கலந்து கொண்டிருந்த தவம் உடன் கூட்டத்திலிருந்து வெளியேறி யாரோ ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தினார்.
அதன்பின் சற்று நிமிடத்தில் அவரது முக நூலில் முகாவின் தீர்மானம் மக்களின் மனோநிலையை பொறுத்தே அமையும் என்ற ரீதியல் உடன் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது. முகா தலைவருக்கும் எம்பிக்களுக்குமான கூட்டம் முடிவடைந்த பின் அழையா விருந்தாளியாக கலந்து கொண்ட தவம் தொடர்பில் எம்பிக்கள்சிலர் ஆட்சேபைனைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதே வேளை முகா தலைவருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குமான தேர்தல் தொடர்பிலான இறுதிக் கட்ட பேச்சு நாளை இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து திங்கள் காலை அதிஉயர் கூட்டம் கூட்டப்பட்டு அன்றைய தினம் மாலை முகாவின் இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது

ad

ad