புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2014

டக்ளஸ் தேவானந்தா நட்பு ரீதியாக  இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து பேசினார் 
யாழ்ப்பாணம் சென்ற இயக்குனர் பாரதிராஜா, இலங்கை அமைச்சரும், தமிழகத்தில் கொலை வழக்கில் சிக்கியவருமான டக்ளஸ்
தேவானந்தாவிடம் கைக்குலுக்கி பேசியுள்ள படம் வெளியாகியுள்ளது. 
யாழ்ப்பாணம் சென்றுள்ள இயக்குனர் பாரதிராஜாவை கௌரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ. சேனாதிராஜா, சி.சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினரான பா.கஜதீபன், இந்திய பிரதி தூதுவர் மூர்த்தி மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இயக்குனர் பாரதிராஜாவை நட்பின் நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது, டக்ளஸ் தேவானந்தா, எதிர்ப்பு அரசியலால் எதையும் செய்ய முடியாது. இணக்க அரசியல் மூலமே எதையும் சாதிக்க முடியும். 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே நாம் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். அத்துடன் அப்போது அதனை எதிர்த்தவர்கள் இப்போது மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டதானது காலம் கடந்த ஞானமாகும்.
அரசில் அங்கம் வகித்திருப்பதன் காரணமாக நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. பிழைகள் இருப்பின் அதை தெரியப்படுத்துமிடத்து அதனை சரிசெய்யவும் நாம் தயாராகவிருக்கின்றோம்.
கடந்த காலங்களில் எதிர்ப்பு அரசியலால் எமது மக்களுக்கு எவையும் கிடைக்கவில்லை. அந்த நிலையில் தான் நாம் இணக்க அரசியலை தெரிவு செய்து அரசுடனான நல்லுறவைப் பயன்படுத்தி மக்களுக்கானவற்றை பெற்றுக் கொடுத்து வருகின்றோம். இது இணக்க அரசியல் மூலம் எதையும் செய்ய முடியுமென்பதுடன் செய்யலாம் என்பது குறித்தும் நாம் நம்புகிறோம்.
ஐ.நாவில் தமிழ் மொழியில் பேசிய ஒரேயொரு ஜனாதிபதி ராஜபக்ச. அவர் இதன் மூலம் அவரது உணர்வு வெளிப்படுகிறது என்றார்.
இதற்கு குறித்து கருத்துத் தெரிவித்த பாரதிராஜா, யுத்தத்திற்குப் பின்னர் வடபகுதி முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

ad

ad