நான் யாரையும் பாஜகவில் சேர சொல்லவில்லை: மு.கஅழகிரி
தமிழக பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் நடிகர் நெப்போலியன் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் 35 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருந்து வருகிறேன். என் மனசாட்சிப்படி தேர்தல் பணியும் ஆற்றியிருக்கிறேன். அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளேன். இதுகுறித்து மு.க. அழகிரியிடம் பேசினேன்.
"சந்தோஷமாக போய் வா' என என்னை வாழ்த்தி ஆசிர்வதித்தார். நானும், எனது ரசிகர் மன்ற உறுப்பினர்களும் பாஜகவின் வளர்சிக்காகப் பாடுபடுவோம் என்றார்.
நெப்போலியன் பேட்டி குறித்து மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, நெப்போலியன் என்னிடம் சொல்லிவிட்டு பாஜகவில் சேர்ந்ததாக கூறவது தவறு. நான் யாரையும் பாஜகவில் சேர சொல்லவில்லை. நானும் பாஜகவில் சேரும் எண்ணங்களில் இல்லை என்றும், தொடர்ந்து திமுகவில் நீடிப்பேன் என்றும் கூறினார்.
திமுகவில் நீக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.