ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் காலை 7மணிக்கு ஆரம்பமாகி சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.
இதன்படி வடக்கு மாகாணத்தில் காலை முதல் வாக்களிப்பு முடிவடையும் வரை யாழ். மாவட்டத்தில் 61% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் எடுத்துவரப்பட்டுள்ளது. அதுபோல முல்லை. மாவட்டத்தில் 74.78 % வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 70%வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 66 %வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் முழுமையான விபரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் 51%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55%
வடக்கு மாகாணத்தில் இதுவரை வாக்களித்த வாக்காளர்களின் வீதத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முன்னிலை வகிக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், இதுவரை வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் முல்லை மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 1.30 மணிவரை 59 % வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.
அதேபோல, யாழ். மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 2மணிவரை 51%வாக்குகளும் , வவுனியா மாவட்டத்தில் 7 மணி தொடக்கம் 2 மணிவரை 51% வாக்குகளும் , மன்னாரில் 50%வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 2 மணிவரை 55 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.