உடுகம பெருந்தோட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிடும் பொழுது தேர்தல் வாக்குகள் என சந்தேகிக்கும் ஆவணங்கள் சில பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளரை பொலிஸார் அணுகியுள்ளனர்.
மத்துகம பிரதேசத்தில் 150 போலி வாக்குகள் பிடிபட்டன
மத்துகம, நராவல பாலர் பாடசாலை வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் 150 போலி வாக்குகளுடன் கெப் வண்டி சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கெப் வண்டிக்குள் இருந்த மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.