புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2015

பிரதம நீதியரசராக சிரானி ஒருநாள் மட்டுமே பதவியிலிருப்பார்?



முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க மீளப்பதவியில்  அமர்த்தப்பட்ட பின்னர் ஒரேயொரு நாள் மட்டுமே பதவியிலிருக்க இணங்கியிருப்பதாக நம்பகரமாக அறியவருவதாக கொழும்பு ரெலிகிராப் இணையத்தளம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.


அவர் எந்தவொரு வழக்கையும் விசாரிக்க விரும்பவில்லையெனவும் அவர் பதவியை இராஜிநாமா செய்வாரெனவும் கௌரவத்துடன் பிரியாவிடை பெறுவதை மட்டுமே அவர் எதிர்பார்ப்பதாகவும் சிரானி பண்டாரநாயக்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் ரெலிகிராப்புக்கு கூறியுள்ளன.

அதேவேளை அவருக்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டாலும் அவரின் கணவருக்கு எதிரான வழக்குகள் தொடருமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்புபட்ட வட்டாரமொன்று கூறியுள்ளது. தேசிய சேமிப்பு வங்கி மோசடி தொடர்பான வழக்கில் அவரின் கணவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

'வழமையான ஆட்சேர்ப்பு நடவடிக்கை மூலம் அவர் பிரவேசித்திருக்கவில்லை. அவரின் நியமனம் முற்றிலும் அரசியல் ரீதியானதாகும் .ஆதலால் அரசியலுடனேயே அவர் தனது தொழிலை ஆரம்பித்திருந்தார். 2010 ஆகஸ்ட்டில்  18 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்களுக்கு அவர் தலைமை தாங்கியிருந்தார். அதனைச் சுற்றி மர்மம் காணப்பட்டது.

அதனை ஆராய்வதற்கு அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட காலம் வழங்கப்பட்டிருக்கவில்லை. நவம்பரிலேயே ஜனாதிபதி தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கான பதவிப்பிரமாணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் அந்தச் சட்டமூலம் அவசரமற்றதென்பது அவருக்குத் தெரிந்திருந்தது.
தனது தீர்மானத்தில் கருத்து பேதத்தை கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி பல்வேறு வழிகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருந்தாரென்பதை நன்றாக அறிந்திருந்தும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையே அவர் வலியுறுத்தியிருந்தார். 

அரசின் நம்பிக்கையை அவர் வென்றெடுத்திருந்தார். இதன்மூலம் 2011 மேயில் பிரதம நீதியரசர் நியமனத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது, என்று விமர்சகர் ஒருவர் கொழும்பு ரெலிகிராப்புக்கு கூறியுள்ளார்.

அத்துடன் நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் மேற்கொண்ட பின்னர் ராஜபக்ஷ குடும்பத்துடன் அவர் புகைப்படம் எடுத்திருந்தமை நீதித்துறையின் சுயாதீனத்தை கேலிக்கிடமாக்கியதுடன் மக்களின் அபிலாஷைகளையும் அவமதிப்புக்குள்ளாக்கியிருந்தது.
இது சகல பாரம்பரியத்தையும் கோட்பாடுகளையும் உடைத்ததாகும் என்று அந்த விமர்சகர் மேலும் கூறியுள்ளார்.

ad

ad