புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2015

கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் தமிழீழம் உருவாக மீண்டும் வழிவகுக்கும் - See more at: http://www.thinakkural.lk/article.php?local/upqvmmspdp844767b4e6365524408ka1qf366f054314061dadd539a0pnirb#sthash.LY1LASe3.dpuf

 கிழக்கு மாகாண  சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்குமானால் மீண்டும் வடக்கு
 கிழக்கு இணைந்த தமிழீழம் உருவாக வழி வகுக்குமென  முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ஸ தெரிவித்துள்ளார். பத்திரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி  கட்சி தலைமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக் கட்சியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான  விமல் வீரவன்ஸ  இவ்வாறு தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்  ; ஜனாதிபதித் தேர்தலில்  மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ள நிலையில்  கிழக்கு மாகாண சபையில் செல்வாக்கு கொண்ட  முஸ்லிம் காங்கிரஸ்   இன்று  மாகாண சபையின்  முதலமைச்சர் பதவியை  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு  வழங்குவதற்கு  திட்டமிட்டு வருகிறது.  இதுபோன்ற செயற்பாடு தேர்தலின் பின்னர்  நிகழும் என  நாம் முன்னரே எதிர்வுகூறியிருந்தோம். அது இன்று நிதர்சனம் ஆகியுள்ளது.  கிழக்கு மாகாண சபையில்  எதிர்க்கட்சியாக  இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வளப்படுத்தும்  செயற்பாடுகளில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுவ ருகிறது.  வடக்கு மாகாணத்தில்  ஆட்சி ஆதிகாரத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில்  அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டால் வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்து  தமிழீழத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில்  ஈடுபடும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமுமில்லை. -

ad

ad