புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2015

இனப்பிரச்சினையை தீர்க்க திடசங்கற்பம்! சவால்கள் காத்திருக்கின்றன: ரணில்


இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வை காண்பதற்கு தாம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை தெ வோல் ஸ்ரீட் ஜேனல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பலமான மனிதனாக கருதப்பட்ட மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து இரண்டு கிழமைகள் சென்றுள்ள நிலையில் புதிய அரசாங்க தலைவர்கள் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அரசியல் யாப்பையும் மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் பாரிய சவால்கள் நாட்டில் காத்திருப்பதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
தெ வோல் ஸ்ரீட் ஜேனலுக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கää பொலிஸ் துறையை அரசியல் மயத்தில் இருந்து விலக்குவதே தமது பிரதான கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.
முடிவடைந்த ஜனாதிபதி தேர்தல், மாற்றத்துக்காக இடம்பெற்றது. இதில் நல்லிணக்கத்துக்கான மாற்றமும்; உள்ளடங்குகிறது என்று ரணில் தெரிவித்துள்ளார்.

ad

ad