-

3 ஜன., 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அன்பழகன் திடீர் மன

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைக்க கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக
உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை, மூன்று மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க கர்நாடகா உயர் நீதிமன்றம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக சிறப்பு நீதிபதியை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்துள்ளார்.

இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி விடுப்பில் இருந்ததால் வழக்கு நீதிபதி பில்லியப்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை வரும 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைக்க கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார். 

அதில், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் மனுதாரர்களுக்கு சாதகமாக நடக்க கூடும் என்றும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தம்மையும் வாதியாக சேர்த்தது போல் இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ad

ad