புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2015

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இலங்கை ஆச்சரியம்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில். முழுமையாக உள்நாட்டு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1931ஆம் ஆண்டு முதல் இலங்கை, ஜனநாயக வரம்புகளை பின்பற்றி வருகிறது. இதன் அடிப்படையிலேயே தேர்தல்களும் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் உள்நாட்டு தேர்தல் ஒன்றில் வெளிநாட்டு பிரதிநிதிகளின் தலையீடு தேவையற்றது என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை கிளை வெளியிட்டுள்ள அறிக்கை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கிளை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜனாதிபதி தேர்தல் வெளிப்படையாக அமைதியாக இடம்பெறவேண்டும்.
அத்துடன், இலங்கை மக்கள் தமது பிரதிநிதியை பயமின்றி தெரிவு செய்ய உகந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்தமை தொடர்பிலேயே இலங்கை வெளியுறவு அமைச்சு தமது எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ad

ad