15 ஆண்டுகள் காங்கிரஸ் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார் கெஜ்ரிவால். காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் டிசம்பர் 26ல் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார். 49 நாள் ஆட்சி நடத்திய கெஜ்ரிவால் சட்டசபையில் லோக்பால் மசோதவை கொண்டு வந்தார். ஆனால் இதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காததால், முதல்வர் பதவியை 2014 பிப்ரவரி 14ம் தேதி ராஜினாமா செய்தார். பின்னர் இங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2015 பிப்ரவரி 7ல் மீண்டும் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து 2வது முறையாக கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்க உள்ளார்.