காங்கிரஸ் முதல் அமைச்சர் வேட்பாளராக அஜய் மக்கான் சதார் பஜார் தொகுதியிலும், பாஜக முதல் அமைச்சர் வேட்பாளராக கிரண்பேடி கிருஷ்ணா நகர் தொகுதியிலும், ஆம் ஆத்மி கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிட்டனர்.
இதில் அரவிந்த் கெஜ்ரிவால் 57 ஆயிரம் வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளரை விட 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கிரண்பேடி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் 2,227ம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மி கட்வி வேட்பாளர் 65,919 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 6,189 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தது.
அஜய் மக்கான் போட்டியிட்ட சதார் பஜார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்தத் 67,507 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளர் பிரவீன்குமார் ஜெயினைவிட 34 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார். அஜய் மக்கான் 16,331 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.
பாஜகவின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக கிரண்பேடி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தததையடுத்து, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அஜய் மக்கான் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சியினரின் தவறான அணுகுமுறையை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.