புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2015

ஆஸி.யின் ஆதிக்கத்தை தடுக்க முயற்சி


4 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முடிவுகட்டி விளையாடும் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்த உலகக்
கிண்ணத்தில் முறியடிக்க தென் ஆபிரிக்க கப்டன் ஏ.பி.டீ.வில்லியர்ஸ் முனைப்புக் காட்டி வருகிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்;

‘ஆஸி. அணி ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர்1 என்பதை மறுக்க முடியாது. உள்நாட்டில் விளையாடுகின்றனர். இதனால் அனுகூலங்கள் அதிகம். இதனால் கொஞ்சம் அழுத்தம் கூட அவர்களுக்கு இருக்கும்.


ஆனால். இந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணியில் எங்கள் அணியும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. உலகில் தலைசிறந்த அணி தென் ஆபிரிக்கா என்ற பெயரை மகிழ்ச்சியுடன் அணுகுகிறோம். சிம்பாவேயில் அவுஸ்திரேலியாவை சமீபத்தில்தான் வெற்றி பெற்றுள்ளோம்.


எனவே, உலகின் சிறந்த அணி என்ற முதலிடத்தைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த உலகக் கிண்ணத்தில் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. தவறவிட மாட்டோம் என்று நம்புகிறோம்.


அவுஸ்திரேலியா தவிர நியூஸிலாந்து ஒரு அபாயகரமான அணி. பிரெண்டன் மெக்கலம் ஒரு அருமையான கப்டன், அணியை பிரமாதமாக வழிநடத்திச் செல்கிறார்’’ என்றா

ad

ad