புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2015

ஈ.பி.டி.பியினரே வெளியேறுங்கள்; இல்லையேல் நாங்கள் வெளியேற்றுவோம்


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி  வாழவும் ஜனநாயகம் , கருத்துச் சுதந்திரம் என்பன நிலைநாட்டப்படவும் ஈ.பி.டி.பி குறித்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாங்களாகவே அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்தார். 
 
ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்களின்  இயல்பு வாழ்க்கையினை குழப்புபவர்கள் ஈ.பி.டி.பியினரே. இந்தப் பகுதியில் இடம்பெற்ற பல கொலைகள், காணாமல் போன சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
 
எனவே இந்தப் பகுதியில் இருக்கும் ஈ.பி.டி.பியின்  அலுவலகங்கள் மூடப்பட வேண்டும். அவர்கள் மூடாதவிடத்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். 
 
இவர்கள்  இங்கிருந்து வெளியேறுவதன் மூலம் தமிழ் மக்களின்  வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும். எனவே ஈ.பி.டி.பி தாங்களாகவே வெளியேறாவிட்டால் மைத்திரி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக மூடுவதே எமது நோக்கம்.
 
எனவே இந்த நடவடிக்கைக்கு மக்களும் அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ad

ad