புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2015

ஐ.நா அமர்வுக்கு முன் தமிழ் மக்களது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்; த.தே.கூ காட்டமாக வலியுறுத்து


ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் புதிய அரசினால் விடுவிப்பதாக கூறப்பட்ட வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலையங்களுக்குள்
இருக்கின்ற தமிழ் மக்களின்  நிலங்கள்  விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற உறுப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு ஒன்று இன்று பிற்பகல் யாழ். நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அவர்  மேலும் தெரிவிக்கையில், 
 
தேர்தலுக்கு முன்னர் புதிய அரசு இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுதலை செய்யப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்படுவர் என அறிவித்திருந்தது. 
 
எனினும் விடுவிப்பதாக கூறிய  சம்பூர், கேப்பாப்பிலவு, முள்ளிக்குளம், பரவிப்பாஞ்சான் , வலி. வடக்கு எங்கும் இதுவரை ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படவில்லை . 
 
எனினும் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா சென்று இராஜாங்க செயலர் ஜோன் ஹெரியை சந்திக்க முன்னர்  1000 ஏக்கர் காணியை வலி.வடக்கில் விடுவிப்பதாக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு எதற்கானது என்றும் எமக்குத் தெரியும். 
 
அத்துடன்  வலி.வடக்கில் மாதிரிக் கிராமம் என்றும் கூறினர் . எனினும் அதனை நாங்கள்  முற்றுமுழுதாக மறுத்தோம். இவை அனைத்தும் நீதிமன்றங்களில் வழக்குகள்  இருக்கும் போதே நடைபெற்று வருகின்றன .
 
விசேடமாக சம்பூர், வலி.வடக்கு ஆகிய இடங்களின் வரைபடங்கள் மற்றும் குடும்ப எண்ணிக்கையுடன்  அரசிடம் வழங்கியுள்ளோம். இதில் காலதாமதம் ஏற்பட வேண்டிய தேவையில்லை. 
 
எனவே ஐ.நா மனித உரிமைப் போரவை மார்ச் மாதம் ஆரம்பிக்க முன்னர் மக்களுடைய நிலங்கள்  விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.
 
 
இல்லையேல் எங்களுக்கு அரசு பொய் கூறி தேர்தலில் வெற்றி கொண்டது என்று சர்வதேசத்திடம் முறையிட வேண்டி வரும் என அவர் மேலும் தெரிவித்தார். 

ad

ad