ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்கின் மொசூல்(Mosul) நகரில் ஐ.எஸ் அமைப்பை ஆளும் அபூ டஜனா(Abu Dajana) என்பவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் உட்பட இரண்டு மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.
இச்செய்தியை வெளியிட்ட குர்திஷ் இன ஊடகங்கள் தற்போது இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த ஜனவரி மாதம் ஐ.எஸ் அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் தலைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர்ந்து இவ்வாறு நடந்து வரும் சம்பவங்கள் தீவிரவாதிகளிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
|