ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் ஈடுபடப்போவதாக பிரபல கராத்தே வீரர் ஹூசைனி அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது இல்லத்தில் வேன்டுதலை தொடங்கினார். இதற்காக எட்டு அடி உயரம், ஆறு அடி அகலம், 300 கிலோ எடையில் சிலுவையை தயார் செய்தார். இன்று காலை 11.40 மணியளவில் சிலுவையில் இரண்டு கைகள் மற்றும் கால்களிலும் ஆணி அடித்து வேண்டுதலை தொடங்கினார்.
முதலில் கால்களில் ஆணியை ஹூசைனி அடித்துக் கொண்டார். பின்னர் அவரது மாணவர்கள், ஹூசைனியின் மற்றொரு கையில் ஆணியை அடித்தனர். பின்னர் இரண்டு கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டது. இதையடுத்து சிலுவை நேராக தூக்கி நிறுத்தப்பட்டது.

சுமார் 7 நிமிடம் சிலுவையில் நின்ற படி ஜெயலலிதா விடுதலைக்காக பிரார்த்தனை செய்தார். 11.47 மணிக்கு சிலுவை இறக்கப்பட்டது. அவரது கை, கால்களில் இருந்த ஆணிகள் நீக்கப்பட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக ஹூசைனி கூறுகையில், "உலகிலேயே அதிக வலியை கொடுக்கக்கூடியது சிலுவையில் அறைவதுதான். அதுவும் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்ளும் போது இன்னும் அதிகமான வலி ஏற்படும். அந்த வலியுடன் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக நிறைவேறும். என்னுடைய மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கப்பதக்கங்களை வாங்க வேண்டும் என்றால், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால்தான் முடியும்.

உலகிலேயே முதல் முறையாக தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்ள இருக்கிறேன். இதற்கு முன்பு 4 நாகப்பாம்புகளை கையில் விட்டு கடிக்க வைப்பது, நெருப்பில் இருந்து வெளியே வருவது என பல்வேறு சாதனைகளை செய்துள்ளேன்.
அதனால் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்வது பெரிய விஷம் இல்லை. இதற்கு காவல்துறை அனுமதி தேவையில்லை. அதனால் நான் காவல்துறையிடம் அனுமதி வாங்கவில்லை" என்றார்.