யாழ்.வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று 1.30 மணியளவில் பாடசாலை அதிபர் கிருபநாதன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் குறித்த நிகழ்வில் வெற்றியீட்டிய வீர,வீராங்கனைகளுக்கு பரிசில்களையும்,வெற்றியீட்டிய இல்லத்திற்கு கேடயங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன்,மருதங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரவியராசா மற்றும் தாளையடி பங்குத்தந்தை யேசுரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.