இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைய உள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சந்திக்க உள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோரையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் சண்முகம் விஜயம் செய்ய உள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நீதி அமைச்சர் லண்டனுக்கு விஜயம்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பிரசித்தி பெற்ற மக்னா காட்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 800 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பிரிட்டனின் லண்டனில் சர்வதேச சட்ட சம்மேளனமொன்று நடைபெறவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 25ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டை ஆரம்ப நிகழ்வில் பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் மற்றும் நாடுகளின் நீதி அமைச்சர்கள், சட்ட மா அதிபர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிலையான அபிவிருத்தி, சட்ட அடிப்படை, சர்வதேச பொருளாதார சட்ட நியதிகள், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் நூதன ஜனநாயகம் ஆகியன தொடர்பில் பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனின் நீதி அமைச்சரினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிற்கு அமைய இலங்கை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.