புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2015

விமல் வீரவன்ஸவின் ஊழல்களை அம்பலப்படுத்திய சஷி வீரவன்ஸ

சஷி வீரவன்ஸவின் வாக்குமூலத்தால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலியான தகவல்களுடன் இரண்டு கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியமை சம்பந்தமான விமல் வீரவன்ஸவின் மனைவி நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போதும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சஷி வீரவன்ஸ, தான் கைது செய்யப்படவிருப்பதை அறிந்து கொண்டதை அடுத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பாரிய கொள்ளை, ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ள தனது கணவர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்களை கைது செய்யாமல், அவர்களுடன் ஒப்பிடும் போது சிறிய தவறை செய்த தன்னை போன்றவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் எனக் சஷி வீரவன்ஸ, அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேட்டுள்ளார்.
அத்துடன் தனது கணவருடன் இருந்த கொள்ளையர்கள், ஊழல்வாதிகள் சம்பந்தமான அவர் விபரமான தகவல்களை அமைச்சரிடம் கூறியுள்ளார். குறிப்பாக தனது கணவரான விமல் வீரவன்ஸவின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான விரிவான தகவல்களை அமைச்சர் ராஜிதவிடம் சஷி வழங்கியுள்ளார்.
கொழும்பு டாலி வீதியில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான காணியை போலி காணி உறுதியை செய்து விற்றமை, கொழும்பு துறைமுகத்திற்கு கருங்கல் விநியோகிகத்திற்கான ஒப்பந்தத்தை பெற்றமை, தார் அனுமதிப்பத்திரத்தை பெற்றமை, சலாக உரிமையாளரான பெண்ணுடன் இணைந்து சர்வதேச வர்த்தகர்களுடன் மேற்கொண்ட நிதி கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமான விபரமான தகவல்களை சஷி வீரவன்ஸ, அமைச்சர் ராஜிதவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர வேறு முறைகேடான கொடுக்கல், வாங்கல்கள் பற்றியும் கூறியுள்ளார். அத்துடன் விமல் வீரவன்ஸவின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு பெண்கள் பற்றிய தகவல்களையும் சஷி வீரவன்ஸ வெளியிட்டுள்ளார்.
இந்த சகல விடயங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவிக்குமாறு கூறிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதன் பின் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக அறிந்து கொண்ட விமல் வீரவன்ஸ, குழம்பி போயுள்ளதுடன் தனது ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு சஷி வீரவன்ஸ தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் போது தனது மனைவி என குறிப்பிட வேண்டாம் என கேட்டுள்ளார். விமல் வீரவன்ஸவின் பிள்ளைகளின் தாய் என குறிப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீரவன்ஸ தம்பதியினர் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஒற்றுமையாக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதாகவும் இந்த சம்பவத்துடன் அந்த பிரச்சினை மேலும் முற்றியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

ad

ad