புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2015

புதிய அரசே உறவுகளை மீட்டுத்தா: யாழில் போராட்டம்


 காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரியும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்.மாவட்ட
செயலகத்திற்கு முன்பாக  இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.


இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இந்தப் போராட்டம் பேரணியாக சென்று யாழ்.மாவட்ட செயலகத்தை அடைந்தது.

அத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் முன்பாக ஒன்றுகூடிய உறவுகள்  அரசே காணாமற்போன உறவுகளை கண்டுபிடித்துத் தா,கண்ணீர் விடுவதற்கும் எங்களிடம் கண்ணீர் இல்லை, எமது உறவுகளை எங்களிடம் தந்து விடு, மைத்திரி -ரணில் அரசே அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கான மகஜரை யாழ்.மாவட்ட செயலக கணக்காளர் ரகுநாதனிடம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் காணமாற் போன உறவுகள் இணைந்து  கையளித்தனர்.
மேலும் இந்தப் போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான, சிவாஜிலிங்கம் ,கஜதீபன் ,தமிழ்த்தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் காணாமற் போன உறவுகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ad

ad