புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2015

மக்கள் பிரதிநிதிகள் குழப்பம் செய்தால் கன்னத்தில் அறையுங்கள்: பொதுமக்களுக்கு சந்திரிக்கா அறிவுரை


சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியாவது குழப்பங்களை விளைவித்தால் அல்லது முரண்பாடுகளை தோற்றுவித்தால், பொதுமக்களாகிய நீங்கள் அவர்களுடைய கன்னத்தில் அறையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்தக் கூட்டமட் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தொடர்ந்து பேசிய முன்னாள் ஜனாதிபதி,
மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எமது பயணத்தை ஆரம்பிக்கும்போது எம்மோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்திருக்கவில்லை. ஆனால் மக்களாகிய நீங்கள் எமக்கு ஆதரவாக இருந்தீர்கள். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தப் பயணத்தில் பாரிய பங்களிப்பினைச் செய்திருந்தது.
மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் கறைபடியாதவர்களாக இருப்பது மிக அவசியமாகும்.
அந்த வகையில் இந்த புதிய ஆட்சிப் பயணத்தில் இணைத்துக் கொள்வோமானால் நல்ல முறையில் பண்பானதும் ஒழுக்கமுள்ளதுமான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
ஆகவே பண்பானா நாட்டை கட்டியெப்பும் பயணத்தின்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் குழப்பங்களை விளைவித்தால் அல்லது குழப்பகரமான சூழலை தோற்றுவித்தால் எந்தவிதத்திலும் தயங்காது பொதுமக்கள் அவர்களது கன்னத்தில் அறையுங்கள்.
மோசடிகாரர்கள், குற்றமிழைத்தவர்கள் எவரும் மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட அருகதையற்றவர்கள்,
இந்த விடயத்தில் நான் உங்களோடு இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad