புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2015

வலைதளம் மூலம் நிர்வாண படங்களை பெற்று மிரட்டும் கும்பல்: பொலிஸ் எச்சரிக்கை


சமூக வலைதளங்கள் மூலம் பழகி, நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டு, பின்பு சம்பந்தபட்டவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவிஸில் கடந்த 7 மாதங்களில், சமூக வலைதளங்களில் ஆண்களும், பெண்களும் அறிமுகமில்லாத நபர்களிடம் பழகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுடன் பழகும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொடக்கத்தில் மென்மையாக பழகி, நாளடைவில் கவர்ச்சியாக நிர்வாணமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துகொள்கின்றனர்.
பின்னர் சிலகாலம் கழித்து அந்த கும்பல், இவ்வாறு பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி சம்பந்தப்பட்ட நபர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் செயல் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இணையதளங்கள் மூலம் பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறிக்கும் இந்த கும்பல் பல நாடுகளில் உள்ளதாகவும், பிரித்தானியாவில் மட்டும் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான நபர்கள் மிரட்டலுக்கு ஆளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த யூலை மாதம் ஸ்கொட்லாந்தை சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவரிடம் இதுபோன்ற வீடியோக்களை பெற்ற அந்த கும்பலைச் சேர்ந்த பெண், பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால், அந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டார்.
சுவிட்சர்லாந்த்தின் பெர்ன் (Bern) நகரில் மட்டும் கடந்த யூன் முதல் ஜனவரி 2015 வரை 50 நபர்கள் இதுபோன்ற மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டிலிருந்து இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக சுவிஸ் மத்திய இணையதள குற்றவியல் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இணையம் மூலம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதுபோன்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்த விவரங்களை பொலிசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் சுவிஸ் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ad

ad