புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

ஈழத்தமிழ் அகதிகளை மைய அரசு இலங்கைக்கு அனுப்பக் கூடாது: மதிமுக பொதுக்குழு வலியுறுத்தல்



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் தூத்துக்குடி - 628 002, எட்டையபுரம் சாலை, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது. 

பொதுக்குழு கூட்டத்தில்,

தீர்மானம் -10: இலங்கையில் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியதால் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கின்றார். இலங்கையின் அதிபராக மைத்திரி பால சிறிசேன பொறுப்பு ஏற்ற பின்னர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஜனவரி 19 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களான ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக இலங்கை-இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக அரசின் சார்பில் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருக்கின்றது. 

இதற்குப் பதில் அளித்துள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் நிலைமை இதுவரை சீராகவில்லை, இராணுவ முகாம்கள் இன்னமும் தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கின்றது; எனவே, தமிழகத்தில் இருந்து ஈழத் தமிழ் ஏதிலிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு இது உகந்த நேரம் அல்ல என்று மத்திய அரசுக்கு மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். ஈழத்தமிழ் அகதிகளை மைய அரசு இலங்கைக்கு அனுப்பக் கூடாது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்களின் பூர்வீக தயாகப் பகுதியில் இருந்து இராணுவ முகாம்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், 2009 இல் நடைபெற்ற போரில் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, சொந்த நிலங்களையும் வீடுகளையும் இழந்து நிற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்களின் உடைமைகள் திரும்பக் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

ad

ad