புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

பூஜை என்ற பெயரில் ஸ்ரீரங்கத்தில் விதியை மீறுகிறதா அதிமுக?

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள தமிழக அமைச்சர்கள் 30 பேர் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் 2500 முதல் 3000 ஓட்டுகளை உள்ளடக்கிய பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில் சன்னதியில் நேற்று முன்தினம் மகாசுதர்சன யாகம் நடத்தப்பட்டது.
இதேபோல் ஸ்ரீரங்கம் தசாவதார சன்னதியில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர் சின்னய்யா தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இது போன்ற நடவடிக்கைகள் தேர்தல் விதிமீறல்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், தேர்தல் சமயங்களில் வழிபாட்டு தலங்களில் நடத்தப்படும் இது போன்ற சம்பிரதாயங்கள் நடத்தப்படக்கூடாது. இவை அப்பட்டமான விதிமுறை மீறல்கள் ஆகும். அதுவும் அமைச்சர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது என்று கூறியுள்ளனர்.

ad

ad