புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

அதி மேதகு வேண்டாம் - மைத்திரிபால

அதிமேதகு என்ற சொல்லை இன்று முதல் தனது பெய ருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி
பால சிறிசேன வேண்டு கோள் விடுத்துள்ளார்.
 
முதற் பிரஜையுடன் முதலாவது உரையாடல் என்னும் தலைப்பில் அரச ஊடகங்களில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது
இலங்கை ஜனநாயகச் சோ­லிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி என இதுவரை காலமும் ஊடகங்கள் உட்பட அரச சேவைகளில் உபயோகிக்கப்பட்டு வந்தது. என்றாலும் இன்று முதல் எனது பெயருக்கு முன்னால் அதிமேதகு என்ற சொல்லை உபயோகிக்கவேண்டாம் இலங்கை ஜனநாயக சோ­லிசக் குடியரசின் ஜனாதிபதி என உபயோகித்தால் போதுமானது.
 
அதேபோன்று எனது மனைவிக்கும் ஜனாதிபதியின் மனைவி என அழைத்தால் போதுமானது. முதற் பெண்மணி என அழைக்கவேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

ad

ad