புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2015

முதல் கட்ட நடவடிக்கையாக 1000 பஸ்களில் சிசிரிவி கமராக்கள்


நாட்டில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பஸ்களில் சிசிரிவி (CCTV) கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்துத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. 

முதலில் ஆயிரம் தனியார் மற்றும் அரச துறை பஸ்களுக்கு சிசிரிவி கமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பஸ்களில் பயணஞ் செய்யும் பயணிகளின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒரு முயற்சியாகவும் பயணிகளை துஷ்பிரயோகஞ் செய்யும் நடவடிக்கைகளை தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவுமே இந்த சிசிரிவி கமராக்கள் பொருத்தப்படவிருப்பதாக அமைச்சு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 

பயணஞ் செய்யும் பெண்கள் சக பயணிகளாலும் பஸ் ஊழியர்களாலும் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் பஸ்களில் மிதி பலகைகளில் பயணஞ் செய்வதை தடுப்பதற்காகவும் சிசிரிவி கமராக்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

ad

ad