புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2015

கோஹ்லி, கெய்ல், கங்குலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார் சங்கக்காரா



இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில், உலகக்கிண்ண தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 47.2 ஓவர்களிலே ஒரு விக்கெட் மட்டும் இழந்து 312 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. திரிமான்னே (139), சங்கக்காரா (117) ஆகியோர் சதம் அடித்து இலங்கை அணிக்கு கைகொடுத்தனர்.
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சங்கக்காரா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகசதம் அடித்தவர்கள் வரிசையில் கோஹ்லி (22), கெய்ல் (22), கங்குலி (22) ஆகியோர்களை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சங்கக்காரா இதுவரை 377 இன்னிங்ஸிகளில் விளையாடி 23 சதங்களை எடுத்துள்ளார். சச்சின் (49), பொண்டிங் (30), ஜெயசூரியா (28) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

ad

ad