யாழ்.இளவாலை பொலிஸாரினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் வீடுகளை விடுவிக்க கோரி குறித்த நிலம் மற்றும் வீடுகளுக்குச் சொந்தமான மக் கள் இன்றைய தினம் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றிணை முன்னெடுத்திருக்கின்றனர்.
1992ம் ஆண்டு யுத்தம் காரணமாக மக்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த பின்ன ர் மீண்டும் 1995ம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காக தங்கள் சொந்த இடங்களுக்கு மக்கள் வந்திருந்தனர்.
அப்போது மக்களுடைய வீடுகளில் பொலிஸார் தங்கியிருந்த நிலையில் அன்i றய தினம் தொடக்கம். மக்கள் தங்கள் வீடுகளை தம்மிடம் வழங்குமாறு கோரி தொடர்ச்சியான கோரிக்கைகளை முன் வைத்து வந்த போதும் வீடுகள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்றய தினம் மீள்குடிN யற்ற அமைச்சரிடம் மகஜர் கையளித்த நில உரிமையாளர்கள் இன்றைய தினம் பொலிஸ் நிi லயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது அங்கு வந்த பொலிஸார் தமக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதும் உங்கள் பகுதியிலிருந்து சென்று விடுவோம். என கூறியதுடன் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்கும் வரையில் தமக்கு 6 மாதகாலம் வழங்குமாறும் கோரினர்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மக்கள் ஒரு வாரத்திற்குள் தமது வீடுகளையும், நிலத்தையும் விடுவிக்க வேண்டும்.
தமக்கு வாடகை எதுவும் வேண்டாம். என கடுமையாக கூறியதுடன், தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றிணையும் பொலிஸாருக்கு வழங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் பொலிஸார் மகஜரை பெற்றுள்ளதுடன் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுப்போம் என மக்கள் கூறியதுடன் கலைந்து சென்றிருக்கின்றனர்.