புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

மரண தண்டனையிலிருந்து மயூரனை காப்பாற்றும் அவுஸ்திரேலியாவின் முயற்சி தோல்வி




அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் சிறைக் கைதிகள் பரிமாற்றத் திட்டம் தொடர்பான யோசனையை இந்தோனேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் இந்தோனேசிய அரசாங்கத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு அவுஸ்ரேலிய பிரஜைகளுக்கு பதிலாக, அவுஸ்ரேலிய சிறையில் உள்ள இந்தோனேசிய சிறைக் கைதிகள் சிலரை பரிமாற்றிக் கொள்ள அவுஸ்ரேலிய அரசாங்கம் யோசனை ஒன்றை முன்வைத்தது.
இந்த யோசனையையே இந்தோனேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அவுஸ்ரேலிய தமிழரான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்றூ சான் என்ற இருவரும் கடந்த 2005ஆம் ஆண்டு பாலியில் இருந்து அவுஸ்ரேவியாவுக்கு பெருமளவு போதைப் பொருளை கடத்த முற்பட்ட வேளையில் இந்தோனேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பொருட்டு அவர்கள் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவர்களுக்கு இன்னும் சில தினங்களில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இவர்களை மீட்கும் ஒரு முயற்சியாக சிறை கைதிகள் பரிமாற்றம் என்ற யோசனை அவுஸ்ரேலியா முன்வைத்த போதிலும் அதனை இந்தோனேசிய மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad