புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

ஹாட்லி, உடுப்பிட்டி இறுதிப் பலப்பரீட்சை

பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றன உடுப்பிட்டி அ.மி.
கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி.
 
வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டத் தொடரின் 19 வயதுப் பிரிவினருக்கான ஆட்டங்கள் நேற்று இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. 
 
முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும் நெல்லியடி மத்திய கல்லூரியும் மோதின. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதற்பாதி ஆட்டத்தில் இரு அணியினருக்கும் கோல் போடுவதற்கான பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவர்கள் அதனை தவற விட, ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியினரும் எந்தவித கோல்களையும் பெறாது சமநிலை வகித்தனர். 
 
இடைவேளையின் பின் இரு அணியினரும் சில மாற்றங்களுடன் அதிரடி வியூகங்களை வகுத்து களமிறங்க மைதானத்தில் இரு அணி ஆட்டத்திலும் அனல் பறந்தது. இதனால் பந்து இரு பகுதி கோல் பகுதியையும் மாறி மாறி ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. 
 
ஆட்டத்தின் 17, 19 ஆவது நிமிடங்களில் ஹாட்லிக் கல்லூரி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தின் சம நிலைத்தன்மையை மாற்றி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். முடிவில் ஹாட்லிக் கல்லூரி 2:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்றது. 
 
இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரியும் வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரியும் மோதின. இதில் 3:0 என்ற கோல் கணக்கில் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 

ad

ad