புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

'ஆடுகளம்' படத்தின் எடிட்டிங் பிரிவில் தேசிய விருது வென்ற தமிழ்திரைப்பட எடிட்டர் பரதேசி கிஷோர் மரணம்



பிரபல தமிழ் திரைப்பட எடிட்டர் கிஷோர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

'ஈரம்', 'ஆடுகளம்', 'பயணம்', 'எங்கேயும் எப்போதும்', 'காஞ்சனா', 'பரதேசி', 'மதயானைக் கூட்டம்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட பல  படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர். இன்னும் திருமணம் செய்துகொள்ளாத 32 வயது இளம் திரைப்பட தொழில்நுட்பக் கலைஞரான இவர், தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுவர்.

 'ஆடுகளம்' படத்தின் எடிட்டிங் பிரிவில் தேசிய விருது வென்று கவனத்தை ஈர்த்தவர். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விசாரணை' படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்தபோது மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

கிஷோரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி செய்திருக்கிறார்கள். அப்போது 24 மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் நினைவு திரும்பவில்லை.  கோமா நிலையில்தான் இருக்கிறார். இந்நிலையில், இன்று (6.3.2015) அன்று மரணம் அடைந்தார்.

ad

ad