புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2015

மோடியின் காரைப் பற்றிய தகவல் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உத்தியோகபூர்வ வாகனமான 'த பீஸ்ட்' என அழைக்கப்படும் கார் தொடர்பில் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டது. 

18 அடி நீளமான குறித்த காரின் எடை போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது. 


'ஆர்மர்' பிளேட்டிங் எனப்படும் அதன் வெளிப்புற கவசம் 8 அங்குலம் தடிமனானது, 5 அங்குல தடிமன் கொண்ட குண்டு துளைக்காத கண்ணாடி ஜன்னல்களையும் கொண்டது. 




இவை, உள்ளே இருக்கும் ஜனாதிபதியை இரசாயன தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான தாக்குதல்களில் இருந்தும் பாதுக்காக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் எந்நேரமும் வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்து தொழில் நுட்ப வசதிகளும் உள்ளது.

அதேபோல் மோடியின் உத்தியோகபூர்வ வாகனம் தொடர்பிலான தகவலும் சற்று சுவாரஸ்யமானது.

மோடி உபயோகிக்கும் காரானது பி.எம்.டபிளியூ 7 தொடரைச் சேர்ந்ததாகும். 

ஒபாமாவின் 'பீஸ்ட்' ஐப் போல இக் காரும் ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்பகுதி துப்பாக்கி குண்டுகள் உட்பட பாரிய ஆயுதங்களால் துளைக்க முடியாத உலோகத்தினால் ஆனது. 




வாயுத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் அதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வசதியையும் இக்கார் கொண்டுள்ளது.

சேதமாக்க கடினமான, எந்த தருணத்திலும் வெடிக்க முடியாத எரிபொருள் தாங்கி, குண்டு துளைக்காத கண்ணாடி , அவசர கதவு, தீயணைப்பு வசதி போன்றவற்றையும் கொண்டுள்ளது. 

Engine: 5,972 cc
Power: 544 bhp
Fuel: Petrol
Mileage: 4.5-7.46 kmpl
0-100 kmph: 6.1 seconds
Top Speed: 210 kmph

ad

ad