புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2015

உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா




ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது 4–வது லீக்கில் உலக கோப்பையின் அறிமுக அணியான ஆப்கானிஸ்தானை பெர்த்தில் இன்று  சந்தித்தது. தாறுமாறாக ‘பவுன்ஸ்’ ஆகக்கூடிய பெர்த், மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக  அறிவித்தது. இதன்படி முதலில் களம் இறங்கிய  ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் பிஞ்ச் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதைதொடர்ந்து வார்னர் வான வேடிக்கை காட்ட ஆஸ்திரேலிய அணி ரன் மழை பொழிந்தது.  133 பந்துகளில் 178 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்மித் 95 ரன்களும் மேக்ஸ்வேல்லின் (39 பந்துகளில் 88 ரன்கள்) சூறாவளியாலும்  ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 417 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து 418 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய அணியின் துல்லியமான  தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் 37.3 ஓவர்களில் அந்த அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை ருசித்தது.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டுகளை அள்ளினார். ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலிய வீரர் வார்னர் தட்டிச்சென்றார். 

இதற்கிடையே,  உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில் அதிக ரன் குவித்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது   பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி அடித்த 413 ரன்களே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி அடித்த அதிக ரன்கள் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணி இன்று முறியடித்தது. 

ad

ad